அரசியல் செய்தி

தமிழ்நாடு

'10 மாவட்டங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லுாரிகள்'

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:''பத்து மாவட்டங்களில், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அவரது அறிவிப்புகள்:* விருதுநகர் மாவட்டம் -திருச்சுழி; கள்ளக்குறிச்சி - திருக்கோவிலுார்; ஈரோடு- தாளவாடி; திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம்; திருநெல்வேலி - மானுார்; திருப்பூர் - தாராபுரம்; தர்மபுரி - ஏரியூர். புதுக்கோட்டை -

சென்னை:''பத்து மாவட்டங்களில், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அவரது அறிவிப்புகள்:

* விருதுநகர் மாவட்டம் -திருச்சுழி; கள்ளக்குறிச்சி - திருக்கோவிலுார்; ஈரோடு- தாளவாடி; திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம்; திருநெல்வேலி - மானுார்; திருப்பூர் - தாராபுரம்; தர்மபுரி - ஏரியூர். புதுக்கோட்டை - ஆலங்குடி; வேலுார் - சேர்க்காடு ஆகிய இடங்களில், இரு பாலருக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும், திருவாரூர் - கூத்தாநல்லுாரில் மகளிருக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் துவக்கப்படும்


புதிய கட்டடங்கள்* சென்னை - வியாசர்பாடி, தர்மபுரி, பரமக்குடி, அரியலுார், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி நகரங்களில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ௧ கோடி ரூபாய் செலவில் மின்னணு நுாலகங்கள் அமைக்கப்படும்

* வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சங்கரன்கோவில், ஜம்புகுளம், வானுார், ஆலங்குளம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, தலா 11.33 கோடி ரூபாய் வீதம் 45.3 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்

* செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை - நந்தனம், திருப்பூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் துவக்கப்படும்

* தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து,100 பாடப் புத்தகங்கள்,2 கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும்

*அடுத்த கல்வியாண்டில், 'சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா' படிப்புகள், தமிழ் வழியில் துவக்கப்படும்

*பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவியர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்காக, 'இன்டீரியர் டெகரேஷன்' அலுவலக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகள், 'வெப் டிசைனிங், கேட்' மற்றும் உயிர்மருத்துவ மின்னணுவியல் மற்றும் இ.சி.ஜி.,தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகள் துவங்கப்படும்

* திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஜெர்மனி, ஜப்பான், சீனா, ரஷ்யா, பிரெஞ்சு ஆகிய அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும்

* வணிகவியல் பயிற்சி டிப்ளமா, வணிகவியல் பயிற்சி மற்றும் கணினி பயன்பாடுகள் டிப்ளமா படித்த மாணவர்களை, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டு பி.காம்., படிப்பில் சேர்க்க வழிவகை செய்யப்படும்


மாணவர் விடுதி

* தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மும்பை ஐ.ஐ.டி.,யுடன் உயர் கல்வித் துறை இணைந்து, 51 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லுாரிகளில், நிகழ்நிலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்

* சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில், 1 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி பல்கலைக்கு மண்டல மையங்கள் அமைக்கப்படும்

*கோவையில் உள்ள அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில், 14 கோடி ரூபாய் செலவில் புதிய மாணவியர் விடுதியும், மதுரை வளாகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய மாணவர் விடுதியும் கட்டப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
27-ஆக-202115:12:28 IST Report Abuse
duruvasar கல்வி தந்தைகள் சங்கம் எதிர்ப்பு போராட்டம் செய்யாமல் பார்த்துக்குங்க.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202112:02:01 IST Report Abuse
vpurushothaman சபாஷ். நல்ல வசூல்தான். காடு மேடெல்லாம் கல்விச் சாலை. தெருவெங்கும் கல்லூரிகள். பெற்றோர் தலையில் கை வைக்காமல் இருந்தால் சரி. எத்தனை பினாமி உருவாகப் போகிறதோ ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஆக-202110:36:30 IST Report Abuse
duruvasar எல்லாம் சரி. அந்த சமூக நீதி இட ஒதுக்கீடு விஷயத்தை மறந்துடாதீங்க. நம்ம கிட்ட ரொம்ப நாள இருக்கிற ஒரே ஏஸ் கார்டு அது ஒன்னுதான். மத்த கார்டு எல்லாம் டம்மி. கவனத்தில் வெச்சிக்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X