அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள் பதிலுரை அ.தி.மு.க., புறக்கணிப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பேசிய முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ''விழுப்புரத்தில் துவங்குவதாக, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலை செயல்பட
அமைச்சர்கள் பதிலுரை ,அ.தி.மு.க., புறக்கணிப்பு

உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது.

அ.தி.மு.க., சார்பில் பேசிய முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ''விழுப்புரத்தில் துவங்குவதாக, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலை செயல்பட வேண்டும்,'' என்றார்.இது தொடர்பாக, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். இதையடுத்து, ''பல்கலை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்,'' என முதல்வருக்கு அன்பழகன் கோரிக்கை வைத்தார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து, ''கிராமங்களில் இருந்து நகரம் வரை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவ - மாணவியர் படித்து உயர வேண்டும் என்பதற்காக, பள்ளிகள், கல்லுாரிகளைத் திறந்தவர் ஜெயலலிதா.
''அவரது பெயரில் விழுப்புரத்தில் பல்கலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது, தொடர வேண்டும். அந்த பல்கலை, அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும் என, அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதிலுரையை புறக்கணிக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஆக-202104:50:16 IST Report Abuse
meenakshisundaram 'பன்னீர் 'கண்ணீர் விட வேண்டாமா ?கூட சேர்ந்து ஜால்றா தட்டுறாரே ?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202106:45:21 IST Report Abuse
Kasimani Baskaran ஊழலுக்கு ஏற்கனவே திமுக, அதிமுக என இரண்டு பல்கலைக்கழகங்கள் திராவிடர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி புதிதாக ஆரம்பித்து அப்படி என்னதான் புதிதாக சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
27-ஆக-202102:42:01 IST Report Abuse
BASKAR TETCHANA இவர்கள் இருவருமே கல்வித்துறையை பற்றி தெரியாதவர்கள். இருவரும் சேர்ந்து மக்களையும் மாணவ மாணவியர்களை குழப்பும் குழப்பவாதிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X