அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மேகதாது அணை விவகாரத்தை ஆணையத்தில் விவாதிக்க கூடாது'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:'மேகதாது அணை விவகாரத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.இத்தகவலை, கர்நாடக

சென்னை:'மேகதாது அணை விவகாரத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:

மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.இத்தகவலை, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்; அது கண்டிக்கத் தக்கது.

தமிழகத்தின் இசைவு பெறாமல், தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும், மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். அதை விடுத்து, முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள, மத்திய அரசே ஏற்பாடு செய்வது, தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்.

மேகதாது அணை விவகாரத்தில், ஒரு மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு செயல்படக் கூடாது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திற்கான விவாதப் பொருளில், மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X