தடையை மீறி ஏமனுக்கு பயணம் செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி ஏமனுக்கு பயணம் செய்தவர் கைது

Added : ஆக 26, 2021
Share
சென்னை:தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று வந்த பயணி, கைது செய்யப்பட்டார்.ஏமன், லிபியா நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு நலன் கருதி, இந்த இரு நாடுகளுக்கும் செல்ல தடை விதித்து, 2014ல் மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை மீறி, இந்த நாடுகளுக்கு செல்பவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று வந்த பயணி, கைது செய்யப்பட்டார்.

ஏமன், லிபியா நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு நலன் கருதி, இந்த இரு நாடுகளுக்கும் செல்ல தடை விதித்து, 2014ல் மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை மீறி, இந்த நாடுகளுக்கு செல்பவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு பயணியர் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரின் ஆவணங்களை, சென்னை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, சுப்பிரமணியன், 50, என்ற பயணியின் ஆவணங்களை சோதித்தபோது, வேலைக்காக சில ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியா சென்றவர், தடை செய்துள்ள ஏமன் நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்று வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சுப்பிரமணியனை கைது செய்து, மேல் விசாரணைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X