அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் அதிகாரிகளுக்கு விருது!

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:''அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித் தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு என, ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றும் மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஆண்டுதோறும் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:* உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு

சென்னை:''அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித் தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு என, ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றும் மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஆண்டுதோறும் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:

* உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை தொடர்பாக, ஆங்கிலத்தில் வந்துள்ள புத்தகங்கள், 2 கோடி ரூபாய் செலவில் மொழி பெயர்த்து வெளியிடப்படும்

* குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், நன்னெறி கல்வியை கற்பிக்கவும், இளந்தளிர் இலக்கிய திட்டம் வாயிலாக, 100 குழந்தை இலக்கிய நுால்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும்

* அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் வழங்க, ஒவ்வொரு பள்ளியிலும், வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும்

* கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பண்ணிசை, நாட்டுப்புறப் பாட்டு குறித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும். சிலம்பம், மல்யுத்தம் போன்ற பாரம்பரிய கலைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்

* பொது நுாலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்யும் கொள்கையில் திருத்தம் செய்யப் படும். பொது நுாலக சட்டம் உருவாக முக்கிய பங்காற்றிய, எஸ்.ஆர்.அரங்கநாதனை நினைவு கூரும் வகையில், சீர்காழியில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாதிரி நுாலகம் அமைக்கப்படும்

* மாநிலம் முழுதும் உள்ள அரசு பொது நுாலகங்களிலும், ஐந்து ஆண்டுகளில் 2.40 கோடி ரூபாய் செலவில் மின் நுாலகம் ஏற்படுத்தப்படும் கன்னிமரா பொது நுாலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், அதன் பாரம்பரிய நிலை மாறாத வகையில் 3.20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்

* அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்கு, கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும்

* பள்ளிகளுக்கு தடையின்மை சான்று, அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை, இணையவழி வாயிலாக மேற்கொள்ள, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்

* மாநிலத்தில் உள்ள 7,786 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, வீட்டிலேயே 7.80 கோடி ரூபாயில், கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் வழங்கப்படும்

* கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 1 கோடி ரூபாயில் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்

* அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித்தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு என, ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு சிறந்த முறையில் பணியாற்றும், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஆண்டுதோறும் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X