அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தம்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சி - முகமது ஷாநவாஸ்: மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையை, நாம் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை வகுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் சமீப காலங்களில், பல்கலைகளில் என்ன நடந்தது; துணை வேந்தர் நியமனத்தில் என்ன நடந்தது என்பது தெரியும்.துணை வேந்தர் நியமனங்களில், மாநிலத்தின் ஆளுமைத்திறன் நிரூபிக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு பின்பற்றப்பட

விடுதலை சிறுத்தைகள் கட்சி - முகமது ஷாநவாஸ்:

மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையை, நாம் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை வகுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் சமீப காலங்களில், பல்கலைகளில் என்ன நடந்தது; துணை வேந்தர் நியமனத்தில் என்ன நடந்தது என்பது தெரியும்.

துணை வேந்தர் நியமனங்களில், மாநிலத்தின் ஆளுமைத்திறன் நிரூபிக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சமூக நீதிக்கு எதிரான கருத்துகள் பாடத்திட்டங்களில் புகுத்தப்பட்டுள்ளன. எதிரான சிந்தனை உள்ளவர்கள், அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இதில் சீர்திருத்தம் செய்யாமல், மாநில கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது. கல்வி கட்டமைப்பில், முக்கியமான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

சமூக நீதி சிந்தனை உடைய கல்வியாளர்கள் குழு அமைத்து, அவர்கள் தருகிற அறிக்கை அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும்.கடந்த ஆட்சியில், தேசிய கல்வி கொள்கையை நிராகரித்தாலும், அதிலுள்ள அம்சங்கள் வந்துள்ளன. அதை சரி செய்ய வேண்டும். சமூக நீதிக்கு எதிரான கருத்து, பாடத்திட்டங்களில் திணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி:

பாடப் புத்தகங்களில், திராவிட கொள்கைக்கு எதிரான கருத்துகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. அவை நீக்கப்பட்டு விட்டன.

முகமது ஷாநவாஸ்:

தொண்டு நிறுவனங்களை, கற்றல், கற்பித்தல் முறையில் பயன்படுத்துவது, புதிய கல்வி கொள்கையின் முடிவு. தமிழகத்தில், 'அகஸ்தியா' தொண்டு நிறுவனம், கற்றல், கற்பித்தல் முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, சமூக நீதி சிந்தனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆட்சியிலும் தொடர்வதாக செய்தி வந்துள்ளது. அதை தவிர்க்க வேண்டும்.

அமைச்சர் மகேஷ்:

தொண்டு நிறுவனங்கள், 20 மாநிலங்களில் பல்வேறு பணிகளை செய்கின்றன. கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. கொள்கையை மாற்ற, யார் நுழைந்தாலும் ஒடுக்கப்படுவர்.நீங்கள் கூறிய தொண்டு நிறுவனம் ஆய்வகம் அமைத்துள்ளது. அதைத் தான் அனுமதித்துள்ளோம். அவர்களுடைய கருத்துகளை திணிக்க அனுமதிக்கவில்லை.

முகமது ஷாநவாஸ்:

கருணாநிதி நினைவாக, மொழியியல் பல்கலை துவக்க வேண்டும் என்பது, வி.சி., தலைவர் திருமாவளவன் விருப்பம். அதை நிறைவேற்ற வேண்டும். கவிஞர் அப்துல்ரகுமான் பெயரில், பல்கலை ஆய்வு இருக்கை அமைக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X