திருமண சர்ச்சையில் சிக்கிய திரிணமுல் பெண் எம்.பி.,க்கு ஆண் குழந்தை

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் காங்., - எம்.பி.,யும், நடிகையுமான நஸ்ரத் ஜஹானுக்கு இன்று (ஆக.26) ஆண் குழந்தை பிறந்தது. திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், பிரபல பெங்காலி நடிகையுமான நஸ்ரத் ஜஹான், தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் துருக்கியில் நடந்தது. கடந்த ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.அப்போது நஸ்ரத் அளித்த பேட்டியில், 'எனக்கும், நிகில்
 திருமண சர்ச்சை,ய திரிணமுல் பெண் எம்.பி.,க்கு
 ஆண் குழந்தை

கோல்கட்டா: திரிணமுல் காங்., - எம்.பி.,யும், நடிகையுமான நஸ்ரத் ஜஹானுக்கு இன்று (ஆக.26) ஆண் குழந்தை பிறந்தது.

திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், பிரபல பெங்காலி நடிகையுமான நஸ்ரத் ஜஹான், தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் துருக்கியில் நடந்தது. கடந்த ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.அப்போது நஸ்ரத் அளித்த பேட்டியில், 'எனக்கும், நிகில் ஜெயினுக்கும் வெளிநாட்டில் திருமணம் நடந்தது. அதை இந்தியாவில் பதிவு செய்யவில்லை.

'தற்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவே கருதப்படும். எனவே அதற்கு விவாகரத்து தேவையில்லை' என்றார்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil newsஇந்நிலையில், கர்ப்பமாக இருந்த நஸ்ரத் ஜஹானுக்கு கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் (இன்று ஆக.26) ஆண் குழந்தை பிறந்தது.தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, பிரிந்து வாழும் அவரது கணவர் நிகில் கூறுகையில், “எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் என் வாழ்த்துகள்,” என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-ஆக-202116:49:47 IST Report Abuse
DVRR எல்லாமே முன்னுக்கு பின் முரணாக உள்ளது இந்த வரிகளில் " திரிணமுல் காங்., - எம்.பி.,???நடிகை??நஸ்ரத் ஜஹான்?பிரபல பெங்காலி நடிகை????நஸ்ரத் ஜஹான்???தொழிலதிபர் நிகில் ஜெயினை???? திருமணம்??திருமணம் துருக்கியில்???கடந்த ஆண்டு இவர்கள் பிரிந்தனர்??சேர்ந்து வாழ்ந்ததாகவே கருதப்படும். எனவே அதற்கு விவாகரத்து தேவையில்லை???ஆண் குழந்தை பிறந்தது????On 26th August 2021, she gave birth to her boyfriend Yash Dasgupta's son at a private hospital in Kolkata. இது தான் இவர்கள் வீதியில் அலையும் நாலு கால் மிருகத்தின் வாழ்க்கை????
Rate this:
Cancel
rajasekaran - neyveli,இந்தியா
27-ஆக-202110:40:23 IST Report Abuse
rajasekaran பொண்ணு முஸ்லீம் பய்யன் ஜெயின்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-ஆக-202108:09:50 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவளுக்கு ஓட்டு போட்டவர்களை சொல்லணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X