அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பள்ளி கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்!

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
''பள்ளிக் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை என, ஐந்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.சட்டசபையில் அவரது பதிலுரை: மாணவர்களின் கற்றல் திறனில் நாட்டில் 23வது மாநிலமாக தமிழகம் உள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த

''பள்ளிக் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை என, ஐந்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.

சட்டசபையில் அவரது பதிலுரை: மாணவர்களின் கற்றல் திறனில் நாட்டில் 23வது மாநிலமாக தமிழகம் உள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர், சரி செய்ய உத்தரவிட்டார். இடைநிற்றல் மாணவர்களின் சதவீதத்தை 0.75 சதவீதத்தில் இருந்து முற்றிலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால், கற்றல், வாசித்தல் திறன் குறைந்துள்ளது.

எனவே, கற்றல், வாசித்தல் திறனை மேம்படுத்த, 413 வட்டாரங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வீதம், 206 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என, ஐந்து தரப்பும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும். அந்த அளவிற்கு தற்போது உள்ள 'சிஸ்டம்' உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், ஒன்பது அமைச்சர்கள் மாறியுள்ளனர்; 'மியூசிக்கல் சேர்' போல விளையாடி உள்ளனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2010 - 11ல் 76 சதவீதமாக இருந்த அரசு பள்ளி மாணவர் சேர்க்கை, தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது. இதை மீட்டெடுக்க வேண்டும். அரசு பொறுப்பேற்ற இந்த, 112 நாட்களில் பள்ளிக் கல்வித் துறையால், நேர்த்தியாக, சரியான முறையில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு, 65 லட்சம் புத்தகப்பைகள் வழங்க வேண்டும். ஏற்கனவே கொள்முதல் செய்த பைகளில், முன்னாள் முதல்வர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அதை மாற்ற 13 கோடி செலவாகும் என, முதல்வரிடம் கூறினோம். 'அப்படியானால், அவர்கள் முகமே இருந்து விட்டு போகட்டும்; அந்த தொகையை வேறு பணிக்கு பயன்படுத்தலாம்' என, பெருந்தன்மையுடன் கூறிவிட்டார்.

ஒன்பது மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த கல்வி, 'டிவி'யை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது; திட்டம் கைவிடப்படவில்லை. மாணவர்கள் எதிர்காலத்தில் நாங்கள் விளையாட மாட்டோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் முடிந்தவுடன், அரை மணிநேரம் ஒதுக்கி, 6 - 8ம் வகுப்புகளுக்கு தனியாகவும், 9 - பிளஸ் 2 மாணவர்களுக்கு தனியாகவும், ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202112:06:15 IST Report Abuse
vpurushothaman பத்தாண்டு " மியூசிகல் சேர் " மாற்றப்படும். பொய்யா மொழியார் பொழிந்திருக்கிறார். கொஞ்சம் தேறிட்டார். " பாஸ் " மார்க் போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X