கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமனம் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:ஆகம விதிகளுக்கு முரணாக, அர்ச்சகர்களை நியமிக்க தடை கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர், 1க்கு தள்ளி வைத்துள்ளது.வேத கல்விஅகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச் செயலர் முத்துகுமார் தாக்கல் செய்த மனு:வேதம், ஆகமப்படி, சைவ கோவில்களில் நாங்கள் பூஜை செய்து வருகிறோம். ஆகமத்தில் அனுபவம் பெற்றவர்கள், சான்றிதழ் வகுப்பு

சென்னை:ஆகம விதிகளுக்கு முரணாக, அர்ச்சகர்களை நியமிக்க தடை கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர், 1க்கு தள்ளி வைத்துள்ளது.

வேத கல்விஅகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச் செயலர் முத்துகுமார் தாக்கல் செய்த மனு:வேதம், ஆகமப்படி, சைவ கோவில்களில் நாங்கள் பூஜை செய்து வருகிறோம். ஆகமத்தில் அனுபவம் பெற்றவர்கள், சான்றிதழ் வகுப்பு படிப்பது இல்லை. இளம் வயதிலேயே குருவிடம் தீட்சை பெற்று, குறைந்தது மூன்று ஆண்டுகள் வேத கல்வி பயில்வர்.

அர்ச்சகராக வரும் முன், பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான பயிற்சியை ஐந்து ஆண்டுகள் எடுப்பர். கடந்த ஆண்டில் தமிழக அரசு, அறநிலைய துறை ஊழியர்களுக்கான பணி விதிகளை வகுத்துள்ளது. விதிகளின்படி, சம்பந்தப்பட்ட கோவிலின் அறங்காவலர் அல்லது தக்கார் தான் நியமன அதிகாரி.

கடந்த, 2021 ஜூலையில், கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பரிச்சாரகார் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு அனுபவம் பெற்ற அர்ச்சகர்களை நீக்கும் நோக்கில், இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அர்ச்சகராக நியமிக்க கோருபவர்கள், ஓராண்டு வகுப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது, சிவாச்சாரியார்களின் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதல்.

சிவாச்சாரியார்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எங்களின் உரிமைகள் செல்லத்தக்கது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.அர்ச்சகர்கள், ஓதுவார்கள்,பரிச்சாரகார் பணியிடங்களில் நியமனம் செய்ய, நிர்வாக அதிகாரி, உதவி கமிஷனருக்கு அதிகாரமில்லை. அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலருக்கு தான் அதிகாரம் உள்ளது.

எனவே, அறநிலையத்துறை ஊழியர்கள் பணி விதிகளில், சிவாச்சாரியாளர்களின் உரிமை களை மீறும் வகையில் உள்ள சில விதிகளை, ரத்து செய்ய வேண்டும்.ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்களை நியமிக்கக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைமனு, தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிஆதிகேசவலு அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, செப்., 1 ல் விசார ணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும்படி, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து, விசாரணையை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X