அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., படிக்கவும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (18+ 33)
Share
Advertisement
சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ௭.௫ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டிலேயே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம்
இன்ஜி., படிக்கவும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ,மசோதா

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ௭.௫ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, நடப்பு கல்வியாண்டிலேயே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை, நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
நுழைவுத் தேர்வு ரத்துதொழிற்கல்வி படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை விட, கிராமப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேருகின்றனர். இதை கருத்தில் வைத்து, 2006ல் தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த 2007 - 08 முதல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

எனினும், பல ஆண்டுகளாக நம் மாநிலத்தில், அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு, உயர் கல்வி பெறுவதும், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதும் மிகவும் கடினமாக இருக்கிறது.ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், தேசிய தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
3.45 லட்சம் பேர்மருத்துவ படிப்பை போன்றே, கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, இன்ஜினியரிங், சட்டம் போன்ற இதர தொழிற்கல்விகளிலும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்து, அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், மூத்த அலுவலர்கள் அடங்கிய ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில், பல வகையான பள்ளிகளில் 1.30 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். 2019 - 20ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் எண்ணிக்கை 8.5 லட்சம். அவர்களில், 3.45 லட்சம் பேர் அரசு பள்ளி மாணவர்கள்.

இன்ஜி., கல்வியில், 2020 - 21ம் கல்வியாண்டு, அண்ணா பல்கலையில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம், 0.83 சதவீதம். அரசு இன்ஜி., கல்லுாரிகளில் 6.31; அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் 0.44; கால்நடை மருத்துவ படிப்பில் ௩ சதவீதம் என்ற அளவில் சேர்க்கை உள்ளது.இதே நிலை, மீன் வளம் படிப்பிலும் நிலவுகிறது. வேளாண்மை தொழிற்கல்வி படிப்பில், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை 4.89 சதவீதமாகவும், தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை மாணவர் கள் சேர்க்கை 1 சதவீதமாக வும் உள்ளன.


முன்னுரிமைஇவற்றை ஆய்வு செய்து, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என்று, ஆணையம் பரிந்துரைத்துள்ளது.ஏற்கனவே மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்ஜினியரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன் வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவு களிலும் 7.5 சதவீத இடங்கள், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ''இந்த சட்ட மசோதாவை முழு மனதோடு ஆதரிக்கிறோம்,'' என்றார். அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவிக்க, சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (18+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஆக-202120:18:47 IST Report Abuse
Pugazh V அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் தான் ஆசிரியர்களைக் குறை சொல்வார்கள். அரசு பள்ளிகளில் பயில வரும் மாணவ மாணவிகளின் வாழ்க்கை நிலை மற்றும் வசதிகள் குறைவு எனவே அவர்கள் ட்யூஷன் செல்ல இயலாது. இங்கே அரசு பள்ளிகளைக் குறை சொல்பவர்களே, "தனியார் பள்ளி மாணவ மாணவிகள் யாரும் ப்ரைவேட் ட்யூஷன் போவதில்லை என்று உங்களால் நெஞ்சைத் தொட்டு உண்மையாகச் சொல்ல முடியுமா ? தமிழக த்தில் இப்போது நடப்பது மக்களின் ஆட்சி. மக்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சியைப் பிடிக்காதவர்கள் தாராளமாக வேறு மாநிலங்களில் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். நீங்கள் கூட வேறு மாநிலங்களுக்கு குடி பெயரலாம்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
27-ஆக-202119:48:53 IST Report Abuse
jagan திறமைக்கும் கொஞ்சம் இட ஒதுக்கீடு செய்யும் காலம் வரும். எதை எடுத்தாலும் இறக்குமதி இல்ல கோலப்ரரேஷன். சொந்த தயாரிப்பு, ஆராய்ச்சி முயற்சி என்று எதுவும் இல்லை. ஒரு காலத்தில் சென்னை பல்கலை மாணவர் CV ராமன் நோபல் எல்லாம் ஜெயிச்சார்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
27-ஆக-202115:30:38 IST Report Abuse
Balaji மருத்துவத்திற்கு செய்தது ஒகே.. பயன் அளிக்கும்.. கூவி கூவி விற்கும் இன்ஜினீயரிங் சீட்டுக்கு இப்படி ஒதுக்கீடு தேவையா? யாருக்கு பயன் அளிக்கும் இது? இருக்கும் சீட்டில் சேரவே ஆளில்லை என்பதே நிதர்சனமான உண்மை.. அய்யகோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X