கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உணவக ஊழியர்களுக்கு கையுறை கட்டாயம்:- ஐகோர்ட்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:'உணவகங்களில் பணிபுரிபவர்கள், கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்' என, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் தாக்கல் செய்த மனு:உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகளில் பொருட்களை, 'பார்சல்' செய்யும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், 'பேப்பர்'களை பிரிக்க எச்சிலையும், 'கவர்'களை திறக்க,

சென்னை:'உணவகங்களில் பணிபுரிபவர்கள், கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்' என, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் தாக்கல் செய்த மனு:உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகளில் பொருட்களை, 'பார்சல்' செய்யும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், 'பேப்பர்'களை பிரிக்க எச்சிலையும், 'கவர்'களை திறக்க, வாயால் ஊதவும் செய்கின்றனர்.இதனால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா பரவல் காலத்தில், உணவு பொருட்களை பார்சல் செய்யும் போது, எச்சில் அல்லது ஊதுவதால் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவு பொருட்களை கையாளுபவர்கள், எச்சில் தொட்டு பயன்படுத்தக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், 'அரசாணை பிறப்பித்தால் மட்டும் போதாது; அது குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்' என்று வலியுறுத்தப் பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கோரிக்கை தொடர்பாக, அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக உள்ளது. உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள், கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.பொது மக்களின் ஆரோக்கியத்தில், எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை செயலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இதை செயல்படுத்துவதை முறைப்படுத்த, உணவு பாதுகாப்பு அதிகாரியை, 'நோடல்' அதிகாரியாக நியமித்து, விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X