அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மனைகள் வரன்முறை திட்டத்தில் மாற்றமில்லை'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், தற்போதைய நிலையே தொடரும். இதில், மாற்றங்கள் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில், விண்ணப்ப காலம் முடிந்த நிலையில், சிறப்பு வாய்ப்பு காலமும் முடிந்து விட்டது. இத்திட்டத்தில்

சென்னை:'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், தற்போதைய நிலையே தொடரும். இதில், மாற்றங்கள் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில், விண்ணப்ப காலம் முடிந்த நிலையில், சிறப்பு வாய்ப்பு காலமும் முடிந்து விட்டது. இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் துரிதப்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூடுதல் முத்திரை தீர்வை செலுத்தினால் வரன்முறை, இதற்கு அதிகாரிகள் குழு அமைப்பு என்பது போன்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இத்தகைய தகவல்களால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என, நம் நாளிதழில் கடந்த 23ம் தேதி செய்தி வெளியானது.

இது தொடர்பாக, தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்:மனை வரன்முறை திட்டத்தில், தற்போதைய நடைமுறைகளே தொடரும். இதில், பரிசீலனை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.மேலும், மனை வரன்முறையில் மாற்றம் செய்வதாக வரும் தகவல்கள் அதிகாரப் பூர்வமானவை அல்ல. இது தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X