மோசடி கும்பல் மீது நடிகர் சூர்யா நிறுவனம் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி கும்பல் மீது நடிகர் சூர்யா நிறுவனம் புகார்

Added : ஆக 26, 2021
Share
சென்னை:நடிகர் சூர்யா பட தயாரிப்புநிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, நடிகர் - நடிகையர் தேர்வு நடத்தி, பண மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா, '2டி என்டர்டெயின்மென்ட்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில், புதிய படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. அதில்,
 மோசடி கும்பல் மீது நடிகர் சூர்யா நிறுவனம் புகார்

சென்னை:நடிகர் சூர்யா பட தயாரிப்புநிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, நடிகர் - நடிகையர் தேர்வு நடத்தி, பண மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா, '2டி என்டர்டெயின்மென்ட்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில், புதிய படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. அதில், சிவகார்த்திகேயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு, நடிகர் - நடிகையர் தேர்வு நடக்கிறது.

அதற்கு முன்பணமாக, 3,500 ரூபாய் செலுத்த வேண்டும் என, சூர்யா நிறுவனத்தின் 'லோகோ'வை பயன்படுத்தி, மின்னஞ்சல் வாயிலாக விளம்பரம் செய்து, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மோசடி நபர்களுக்கும், பணம் கொடுத்தவர்களுக்கும் இடையே நடந்த குறுஞ்செய்தி உரையாடல் ஆதாரத்துடன், 'ஆன்லைன்' வாயிலாக, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X