கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பம்பர் டூ பம்பர்' காப்பீடு பாலிசி: புதிய வாகனங்களுக்கு கட்டாயம்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை :புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும்படி, போக்குவரத்து துறை கூடுதல் செயலரை அறிவுறுத்தியுள்ளது.விபத்து தீர்ப்பாயம்கடந்த 2016 ஆகஸ்டில், பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் சென்ற கார்,
பம்பர் டூ பம்பர்,காப்பீடு பாலிசி புதிய வாகனங்களுக்கு கட்டாயம்

சென்னை :புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும்படி, போக்குவரத்து துறை கூடுதல் செயலரை அறிவுறுத்தியுள்ளது.


விபத்து தீர்ப்பாயம்



கடந்த 2016 ஆகஸ்டில், பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் சென்ற கார், மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. காரை, அதன் உரிமையாளர் கவுதமன் ஓட்டினார். காரில் இருந்த டிரைவர் சடையப்பன் மற்றும் சுகுமார் இறந்தனர்.இழப்பீடு கோரி, சடையப்பன் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை, ஈரோட்டில் உள்ள வாகன விபத்து தீர்ப்பாயம் விசாரித்தது. சடையப்பன் குடும்பத்தினருக்கு 14.65 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, நியூ இந்தியா நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மனுவில், 'காப்பீட்டு பாலிசியின்படி, வாகனத்தை ஓட்டும் உரிமையாளருக்கு தான் இழப்பீடு பெற உரிமை உள்ளது. பயணம் செய்பவர்களுக்காக, காப்பீட்டு தொகை செலுத்தப்படவில்லை. காரை, உரிமையாளர் தான் ஓட்டியுள்ளார்; இறந்தவர் ஓட்டவில்லை.'அதனால், மூன்றாம் நபர் பாலிசி பொருந்தும் என்பதால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை' என, கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:ஓட்டுனர் மற்றும் பயணியருக்கான காப்பீட்டு பிரிமியம் எதுவும் செலுத்தப்படவில்லை. பாலிசி நிபந்தனைகளை தாக்கல் செய்யவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது; அது, தவறு.


அதிர்ச்சி



கோரிக்கை மனுவை தீர்ப்பாயம் நிராகரித்து இருக்க வேண்டும். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வாகன உரிமையாளரிடம் இருந்து, இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோருவதை, இந்த உத்தரவு தடுக்கவில்லை.ஒரு வாகனம் விற்கப்படும் போது, அதை வாங்குபவருக்கு, காப்பீட்டு பாலிசி நிபந்தனைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெளிவாக தெரிவிக்காதது, வருத்தம் அளிக்கிறது. வாகனங்களை வாங்குபவர்களும், பாலிசி நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.வாகனங்களை வாங்க, கணிசமான தொகையை கொடுக்க தயாராக இருக்கும் போது, தனக்கும், மற்றவர்களின் பாதுகாப்புக்காகவும், குறைவான தொகையை செலவழிக்க ஆர்வம் காட்டாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

எனவே, செப்., 1 முதல் புதிதாக வாகனங்கள் விற்கப்படும் போது, பம்பர் டூ பம்பர் அடிப்படையில் காப்பீட்டு பாலிசி எடுக்கும்படி கட்டாயமாக்க வேண்டும். ஓட்டுனர், பயணியர், வாகன உரிமையாளர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க வேண்டும்.இந்த உத்தரவை, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் அனுப்ப வேண்டும். உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை, செப்., 30ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X