விர்ச்சுவல் மராத்தான்  வரும் 29ல் நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'விர்ச்சுவல்' மராத்தான்  வரும் 29ல் நடக்கிறது

Added : ஆக 27, 2021
Share
கோவை:தேசிய விளையாட்டு தினம், 'பிட் இந்தியா' திட்டத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லுாரி உடற்கல்வி துறை சார்பில், ஆன்-லைன் மினி மராத்தான் போட்டி, வரும் 29ல் நடக்கிறது.கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி கூறியதாவது:மினி மராத்தான் போட்டி, 29ம் தேதி காலை, 6:00 முதல், 8:00 மணி வரை நடக்கும். 'க்யூஆர்., கோடு' பயன்படுத்தி, வீரர்களின் விபரங்களை முன்பதிவு செய்ய

கோவை:தேசிய விளையாட்டு தினம், 'பிட் இந்தியா' திட்டத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லுாரி உடற்கல்வி துறை சார்பில், ஆன்-லைன் மினி மராத்தான் போட்டி, வரும் 29ல் நடக்கிறது.கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி கூறியதாவது:மினி மராத்தான் போட்டி, 29ம் தேதி காலை, 6:00 முதல், 8:00 மணி வரை நடக்கும். 'க்யூஆர்., கோடு' பயன்படுத்தி, வீரர்களின் விபரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, 'டிராக்' செயலிக்குச் சென்று, தங்களுக்கு பிடித்த கி.மீ., தேர்வு செய்து ஓட வேண்டும். பந்தய துாரத்தை நிறைவு செய்ததும், அதன் விபரங்களை போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.பெண்களுக்கு, 2, 3 கி.மீ., பிரிவுகளிலும், ஆண்களுக்கு 5, 8, 10 கி.மீ., பிரிவுகளிலும் போட்டி நடத்தப்படும். பங்கேற்க விரும்புவோர், 99449 77885, 95979 57619 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பங்கேற்போருக்கு, இ-சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X