தொண்டாமுத்தூரில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம்: சாலை குறுகியதால் போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், சாலையின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்துவதால், சாலை குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கோவை மேற்கு புறநகரில், முக்கிய பகுதியாக தொண்டாமுத்தூர் உள்ளது. இங்கு, சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி மற்றும் கல்லூரி, போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், காய்கறி மார்க்கெட், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன .இதனால்,
 தொண்டாமுத்தூரில் சாலையின்  இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம்: சாலை குறுகியதால் போக்குவரத்து நெரிசல்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், சாலையின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்துவதால், சாலை குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கோவை மேற்கு புறநகரில், முக்கிய பகுதியாக தொண்டாமுத்தூர் உள்ளது. இங்கு, சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி மற்றும் கல்லூரி, போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், காய்கறி மார்க்கெட், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன .இதனால், சுற்று வட்டாரத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தினசரி தொண்டாமுத்தூருக்கு வந்து செல்கின்றனர்.தொண்டாமுத்தூர் --- நரசீபுரம் சாலை, 10 மீட்டரும், தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டையில், 12.5 மீட்டர் அகல சாலையும் உள்ளது. இங்கு, அரசு அலுவலகங்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள், தங்களின் வாகனங்களை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.பஸ் ஸ்டாப் உள்ளதால், பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், சாலையின் அகலம் குறைந்து, இப்பகுதியில் நாள்தோறும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க, சந்தைப்பேட்டை பகுதியில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ளது போல, சாலையில் ஒருபுறத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X