மருத்துவமனை ரோட்டை கடப்பது சிரமம்; ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் ஆக்கிரமிப்புஅதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றிவெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான நோயாளிகள்,பார்வையாளர்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் ஆக்கிரமிப்புஅதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றிவெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான நோயாளிகள்,பார்வையாளர்கள் வந்துசெல்கின்றனர். இதுபோக ஓட்டல்கள்,திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள்,ஜவுளிக்கடைகள், போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

இதன்காரணமாக இப்பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம்அதிகமாக உள்ளது. இந்த நிலைமையில் மருத்துவமனைரோட்டை ஆக்கிரமித்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். மேலும்இரண்டு, நான்குசக்கர வாகனங்களை ரோட்டில் பாதி வரைநிறுத்துகின்றனர்.

மருத்துவமனை ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றும்போது நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் மட்டுமின்றி சில நேரங்களில் அவசரமாக புறப்படும் ஆம்புலன்களும் சிக்கி கொள்கின்றன.மருத்துவமனை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய் வரை ரோட்டை அகலப்படுத்த வேண்டும். அதற்கு போலீசார், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.-----------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X