சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க பணியாளர் இல்லை; மருத்துவமனையில் கண்ணாடி உடைப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க ஆள் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனை எக்கோ பரிசோதனை அறை கண்ணாடியை உடைத்து உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் ரோடு சந்திப்பில் நேற்று மாலை 4:30 மணிக்கு சேர்வைக்காரன் ஊரணி வடக்கு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் கண்ணன் 36,
 விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க பணியாளர் இல்லை;  மருத்துவமனையில் கண்ணாடி உடைப்பு

ராமநாதபுரம் : விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க ஆள் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனை எக்கோ பரிசோதனை அறை கண்ணாடியை உடைத்து உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் ரோடு சந்திப்பில் நேற்று மாலை 4:30 மணிக்கு சேர்வைக்காரன் ஊரணி வடக்கு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் கண்ணன் 36, டூவீலரில் சென்றார். பின்னால் வந்த பெருங்குளத்தை சேர்ந்த மோகன்ராஜ் 29, களஞ்சியம் 42, ஆகியோர் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.துாக்கி வீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்தில் பலியானார்.

அவரது டூவீலரின் ஒரு டயர் கழன்று வெகு தொலைவில் கிடந்தது. மோகன்ராஜ், களஞ்சியம் அருகில் உள்ள மணற்பரப்பில் துாக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.அங்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய நிலையில் எக்ஸ்ரே எடுப்பவர் பணியில் இல்லை.

ஒரு மணி நேரத்திற்கும் மேலானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன் தகராறில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனையின் எக்கோ பரிசோதனை அறையின் கண்ணாடி உடைக்கப்பட்டது.அதன் பின், போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு நுழைவு வாசலில் வைத்து ட்ரிப் ஏற்றினர். அதன்பின் இருவரும் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X