சம்பவம் செய்தி

தமிழ்நாடு

-காரை கடத்தியவருக்கு 7 ஆண்டு சிறை; பரமக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பரமக்குடி : தென்காசியில் இருந்து சாயல்குடிக்கு வாடகைக்கு கார் எடுத்து அதனை கடத்திய வழக்கில், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தனியரசு உத்தரவிட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் மாணிக்க நாதன், 31. இவருடன் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் அஜித், கமுதி மறக்குலம் மாரிமுத்து மகன் மணிவண்ணன், 25, பேரையூர் ராமச்சந்திரன் மகன் காளி, 24,

பரமக்குடி : தென்காசியில் இருந்து சாயல்குடிக்கு வாடகைக்கு கார் எடுத்து அதனை கடத்திய வழக்கில், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தனியரசு உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் மாணிக்க நாதன், 31. இவருடன் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் அஜித், கமுதி மறக்குலம் மாரிமுத்து மகன் மணிவண்ணன், 25, பேரையூர் ராமச்சந்திரன் மகன் காளி, 24, ஆகியோர் தென்காசியிலிருந்து சாயல்குடி செல்ல, 2019 பிப். 13 அன்று வாடகை காரை எடுத்து உள்ளனர்.மொச்சிகுளம் லிங்கநாதன் மகன் முத்துமணியிடம் 19, காருக்கு வாடகை கொடுக்க ரூ. 3000 பணத்தை எடுத்து சாயல்குடியில் நிற்குமாறு கூறியுள்ளார்.

காரை தென்காசி டிரைவர் சுப்பிரமணியன் மகன் ஜோதி, 43, ஓட்டி வந்தார்.கார் சாயல்குடி வந்தபோது வாடகை பணத்தை கொடுக்காமல், அரிவாளால் டிரைவர் கையில் வெட்டினார். அனைவரும் சேர்ந்து அவரிடம் இருந்த ரூ. 6000 மதிப்புள்ள அலைபேசி, ரூ. 4,500 பணம் பறித்து, காரையும் கடத்தி சென்றனர். மாணிக்கநாதன் காரை ஓட்டிச் சென்றார்.

கோவிலாங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் ஜோதி புகார் அளித்தார். இதன்படி 5 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மாணிக்கநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தனியரசு உத்தரவிட்டார். மற்ற நால்வரின் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X