பொது செய்தி

தமிழ்நாடு

கற்பித்தலில் நவீன தொழில்நுட்பம் புகுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான, ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்ப (ஐ.சி.டி.,) பயிற்சி, இன்று நிறைவு பெறுகிறது.தமிழகத்தில், அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில், நேரடி வகுப்புகள் நடந்தாலும், டிஜிட்டல் முறையில் கற்பித்தலுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஹைடெக் லேப் வசதி உள்ளது.

கோவை:முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான, ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்ப (ஐ.சி.டி.,) பயிற்சி, இன்று நிறைவு பெறுகிறது.தமிழகத்தில், அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில், நேரடி வகுப்புகள் நடந்தாலும், டிஜிட்டல் முறையில் கற்பித்தலுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஹைடெக் லேப் வசதி உள்ளது. இதை ஆக்கப்பூர்வமாக கற்பித்தலுக்கு பயன்படுத்தி கொள்வது குறித்து, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, ஐ.சி.டி., பயிற்சி, கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது. அந்தந்த பள்ளி ஆய்வகத்திலேயே, ஆன்லைன் மூலம், ஆசிரியர்கள் இப்பயிற்சியை பெற்றனர்.பாடத்திட்ட கருத்துகளை எளிமையாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி, வீடியோ உருவாக்குதல், அனிமேஷன், யூ-டியூப் சேனல் துவங்குவது, ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ், இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், '' கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்து 157 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்று, பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். வகுப்பறையில் இந்த பயிற்சி செயல்படுத்தப்படுவதை குறித்து, பின்னர் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X