பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒன்பது முதல்பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.,1 முதல்பள்ளி திறப்பு ஏற்பாடுகள் குறித்துஅனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் சந்திரகலா தலைமைவகித்தார். கூடுதல்கலெக்டர் பிரவீன்குமார், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன்முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசுநிதிஉதவிபெறும் பள்ளிகள், 78

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒன்பது முதல்பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.,1 முதல்பள்ளி திறப்பு ஏற்பாடுகள் குறித்துஅனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் சந்திரகலா தலைமைவகித்தார். கூடுதல்கலெக்டர் பிரவீன்குமார், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன்முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசுநிதிஉதவிபெறும் பள்ளிகள், 78 சுயநிதி பள்ளிகள் என 264 பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகளில்31,952 மாணவர்கள் படிக்கின்றனர்.ஆசிரியர்கள், அலுவலர் என5745 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்களில் 3764 பேர் கொரோனாதடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதியுள்ள 1981 பேருக்கு பள்ளிதிறப்பிற்கு முன்பாக தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள்நடக்கிறது.பள்ளி நுழைவாயிலில் ஆசிரியர், மாணவர் உடல்வெப்ப பரிசோதனை, சானிடைசர், சோப்பு தண்ணீர் மூலம்கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர்வலியுறுத்தினார்.முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சுகாதாரத்துறை துணைஇயக்குனர்கள் குமரகுருபரன், ரவீந்திரன், ஊராட்சி உதவிஇயக்குனர் கேசவதாசன் பங்கேற்றனர்.------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X