புதரில் புதைந்த பொன்னடப்பட்டி கண்மாய்; வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதரில் புதைந்த பொன்னடப்பட்டி கண்மாய்; வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு

Added : ஆக 27, 2021
Share
எஸ்.புதுார் : சிங்கம்புணரி அருகே புதருக்குள் புதைந்து கிடக்கும் பொன்னடப்பட்டி கண்மாயை மீட்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.எஸ்.புதுார் ஒன்றியத்தில் கட்டுக்குடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்னடப்பட்டி கண்மாய் புதர்களுக்குள் புதைந்தும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. 15 ஏக்கர் பரப்பு கொண்ட இக்கண்மாயை நம்பி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள்

எஸ்.புதுார் : சிங்கம்புணரி அருகே புதருக்குள் புதைந்து கிடக்கும் பொன்னடப்பட்டி கண்மாயை மீட்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

.எஸ்.புதுார் ஒன்றியத்தில் கட்டுக்குடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்னடப்பட்டி கண்மாய் புதர்களுக்குள் புதைந்தும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. 15 ஏக்கர் பரப்பு கொண்ட இக்கண்மாயை நம்பி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.குன்னத்துார் மலைப்பகுதியில் இருந்து ஓடி வரும் மழை நீர் ஆர்.பாலக்குறிச்சி, வைரவன்பட்டி உள்ளிட்ட சங்கிலித்தொடர் கண்மாய் வழியாக பொன்னடப்பட்டி கண்மாயில் வந்து சேரும்.

இக்கண்மாயின் மறுகால் தண்ணீர் அருகே உள்ள மணலி கண்மாய்க்கு செல்லும். சில வருடங்களாக கண்மாய்க்கு வரும் அனைத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டும் மண் மூடியும் கிடக்கிறது. இதனால் பெரிய மழை பெய்தால் கூட கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. கண்மாயை தூர்வாராததால் சீமைக்கருவேல மரங்களும் புதர்களும் மண்டி கண்மாய் இருந்த இடமே தெரியாமல் உள்ளது.

ஏ.வி.நாகராஜன், விவசாயி பொன்னடப்பட்டி: 15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கண்மாய் நிரம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்றது. அதற்குப் பிறகு கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை விவசாயமும் செய்ய முடியவில்லை. ஒரு சிலர் மட்டும் பம்பு செட் வைத்து சிறிய அளவு நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். கண்மாயை தூர்வாரி வரத்துக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X