பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு ஒத்துழைப்பு தாருங்க; அரசுக்கு ஹிந்து முன்னணி வேண்டுகோள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ''விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஸ்ரீவி.,யில் அவர் கூறியதாவது: கோயில்களை பாதுகாக்க ஹிந்துக்கள் ஒன்று படுவோம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 250க்கு

ஸ்ரீவில்லிபுத்துார் : ''விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீவி.,யில் அவர் கூறியதாவது: கோயில்களை பாதுகாக்க ஹிந்துக்கள் ஒன்று படுவோம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 250க்கு மேற்பட்ட இடங்களில் செப்டம்பர் 10 அன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்ய உள்ளோம்.

கடந்த ஆண்டுகளில் எப்படி சிறப்பாக விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்றதோ, அதுபோல் இந்த ஆண்டும் சிறப்பாக நடக்க அரசு நிர்வாகம் ஒத்துழைப்பு தரவேண்டும். மதசார்பற்ற அரசு என சொல்லக்கூடிய இந்த அரசு மாற்று மதத்திற்கு ஒரு போக்கையும், ஹிந்து மதத்திற்கு வேறொரு போக்கையும் கடைப்பிடிக்கிறது.

கோயில்களில் பக்தர்கள் வழிபாடு தடை செய்தது ஒருதலை பட்சமானது. இது ஹிந்து முன்னணி நடத்தும் விழாவல்ல. ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் விழா. இதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் ,என்றார்.மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், அமைப்பாளர் மாணிக்கம், செயலாளர் சிவா, பொருளாளர் வினோத்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X