சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம்; கீழே கொட்டி நூதன போராட்டம்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மஜித்ரோடு ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததால் அவற்றை கீழே கொட்டி நுாதன போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.இந்த ரேஷன் கடையில் நேற்று கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை வினியோகம் செய்தனர். அதில் ரேஷன் அரிசி பூசணம் பிடித்து தரமற்ற நிலையில் விற்பனை செய்தனர். மேலும் துர்நாற்றம் வீசி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த
ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம்; கீழே கொட்டி நூதன போராட்டம்

சிவகங்கை : சிவகங்கை மஜித்ரோடு ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததால் அவற்றை கீழே கொட்டி நுாதன போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இந்த ரேஷன் கடையில் நேற்று கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை வினியோகம் செய்தனர். அதில் ரேஷன் அரிசி பூசணம் பிடித்து தரமற்ற நிலையில் விற்பனை செய்தனர். மேலும் துர்நாற்றம் வீசி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த அரிசியை பெற்ற கார்டுதாரர்கள் அவற்றை ரோட்டில் கொட்டி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கார்டுதாரர் செண்பகவல்லி கூறியதாவது, கொரோனா நேரத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால், இந்த அரிசி தரமின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதை மாற்றித்தர கோரியும் இருப்பதை தான் தரமுடியும் என விற்பனையாளர் தெரிவிக்கிறார். தரமான அரிசியை வழங்க வேண்டும்.

மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் கூறியதாவது, தரமற்ற அரிசி இருந்தால், அவற்றை மக்களுக்கு விற்க வேண்டாம் என தெரிவித்துவிட்டோம். விற்பனையாளர்கள் அதையும் மீறி விற்பதால் இந்த பிரச்னை வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
27-ஆக-202116:07:15 IST Report Abuse
THINAKAREN KARAMANI அரிசியை லாரிகளில் ஏற்றி ரேசன்கடைகளுக்கு அனுப்பும்போதே இது தரமற்ற அரிசியென்று ஏன் உங்களுக்குத் தெரியாமல் போனது.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-ஆக-202110:44:53 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy காங்கேயம் முழுவதும் இதே நிலை தான். ஆட்சி மாறி காண்ட்ராக்ட் மாறி விட்டது. மண்டையில் அடித்துக்கொண்டு போக வேண்டியது தான் அதை மட்டுமே தின்கிற மக்கள் நிலைமை பாவம்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
27-ஆக-202109:32:51 IST Report Abuse
R.RAMACHANDRAN தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி அவற்றை மக்களுக்கு வழங்கியே ஆக வேண்டும் என்ற கொள்கையை லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்கம் கடை பிடிக்கிறது.மக்களை ஏமாற்ற அடிமைகளாக நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர்.தரத்தை சோதிக்கும் அதிகாரிகள் லஞ்சம் பேரருட் கொண்டு உறங்கிக் கொண்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X