தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்ட்களில் இல்லை வசதிகள்; பயணிகள் நலன் காக்கலாமே அதிகாரிகள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாது பயணிகளுக்கு பரிதவிக்கின்றனர். இதன் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் அனைத்து பகுதிகளிலுமே பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு குடிநீர், சுகாதார வளாகம், விளக்கு போன்ற அடிப்படை வசதிகள்
பஸ் ஸ்டாண்ட்களில் இல்லை வசதிகள்; பயணிகள் நலன் காக்கலாமே அதிகாரிகள்

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாது பயணிகளுக்கு பரிதவிக்கின்றனர். இதன் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் அனைத்து பகுதிகளிலுமே பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு குடிநீர், சுகாதார வளாகம், விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் அறவே இல்லை. சில பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை தற்போது காட்சி பொருளாகி விட்டது. பயணிகளோ குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எந்த பஸ் ஸ்டாண்டிலுமே சுகாதார வளாகம் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆண்களாவது அவசரத்திற்கு எங்காவது ஒதுங்கி விடுவர். ஆனால் பெண்களின் நிலைதான் பரிதாபம். சில பஸ் ஸ்டாண்ட்களில் சுகாதார வளாகம் இருக்கும் இடம் தெரியாது பயணிகள் திண்டாடுகின்றனர். இரவில் விளக்குகள் எரியாமல் திருட்டும் நடக்கிறது. இருக்கைகள் சேதமடைந்திருப்பதால் பிளாட்பார்மில் நின்று கொண்டே பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியதுள்ளது.

பஸ் ஸ்டாண்ட் வளாகங்கள் சீரமைக்கப்படாமல் பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில பஸ் ஸ்டாண்ட் கூரை சேதத்தால் மழைக்காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்க கூட முடியவில்லை. கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி கொசு உற்பத்திக்கும் துணைபோகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதால் போலீஸ் கண்காணிப்பும் அவசியமாகிறது. பயணிகள் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட்களை மேம்படுத்த உள்ளாட்சி துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்............

பெரும் அவதியில் பயணிகள்

அடிப்படை வசதிகள் மிகவும் இன்றியமையாதது. பஸ் ஸ்டாண்டிற்கு பெரும்பாலும் வெளியூர் பயணிகள்தான் அதிகளவில் வருவர். இவர்களுக்கு குடிக்க தண்ணீர், சுகாதார வளாகம் இல்லையெனில் பெரிதும் சிரமப்படுவர். முன்பெல்லாம் பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகளில் குடிக்க தண்ணீர் கேட்டால் உடனே இலவசமாக கொடுப்பர். ஆனால் தற்போது அப்படி இல்லை. பாட்டில் தண்ணீரை விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. இதுதவிர உடனுக்குடன் குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணேசன், சமூக ஆர்வலர், சிவகாசி................................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X