சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் தொடர் கொள்ளை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் தொடர்ந்து வீடுகளில் நகை,பணம் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.காரைக்குடி, குறிஞ்சிநகர் மதியழகன் 63. இவர் காஸ் ஏஜன்சி நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வசூல் பணம் ரூ.6 லட்சத்தை பீரோவில் வைத்துள்ளார். இரவு மர்ம நபர்கள் வீட்டு பின் கதவை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.கோட்டையூர் காட்டூரணி

காரைக்குடி : காரைக்குடி பகுதியில் தொடர்ந்து வீடுகளில் நகை,பணம் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

காரைக்குடி, குறிஞ்சிநகர் மதியழகன் 63. இவர் காஸ் ஏஜன்சி நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வசூல் பணம் ரூ.6 லட்சத்தை பீரோவில் வைத்துள்ளார். இரவு மர்ம நபர்கள் வீட்டு பின் கதவை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.

கோட்டையூர் காட்டூரணி சுந்தரம் 60. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கடந்த வாரம் வள்ளுவர் நகர் மீனாள் வீட்டிற்குள் நுழைந்த முகமூடி நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த நர்சு உட்பட 3 பெண்களின் கழுத்தில் இருந்து 6 பவுன் செயின், பணத்தை வழிப்பறி செய்து தப்பினர்.

இது போன்று நகரில் பகல், இரவு ரோந்து பணிகள் இல்லாததால் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் கல்வி நகரான காரைக்குடி மக்கள், கொள்ளையர்கள் அச்சத்தில் கலக்கம் அடைந்துள்ளனர்.

மக்கள் திருட்டு பயமில்லை என்ற நிம்மதி பெருமூச்சு விட காரைக்குடி டி.எஸ்.பி., வினோஜி ரோந்து பணிகளை முடிக்கிவிட்டு திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X