பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரையில் போலீஸ் பற்றாக்குறை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கீழக்கரை : கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை நிலவுவதால் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகளில் சிரமமும் தொய்வும் ஏற்படுகிறது.மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் பணி

கீழக்கரை : கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை நிலவுவதால் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகளில் சிரமமும் தொய்வும் ஏற்படுகிறது.

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் பணி செய்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் சட்டம் ஒழுங்கை கண்டறியவும், இரவு நேர ரோந்து பணி செய்வதும் குறைந்து வருகிறது.திருட்டு, கொள்ளை நடக்கிறது. கூடுதல் போலீசாரை நியமிக்க கோரி தமிழக முதல்வர், அரசின் தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி வருகிறோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X