விமானத்தில் ஓட்டல் இரட்டையர்கள் அசத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ரமல்லா:மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில், பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி, தங்கள் நீண்ட நாள் கனவை இரட்டை சகோதரர்கள் நிறைவேற்றி உள்ளனர்.பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் எந்த விமான நிலையமும் இல்லை. விமானத்தில் செல்ல வேண்டுமானால் அண்டை நாடான ஜோர்டானுக்குத் தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பாலஸ்தீனத்தின் வடக்கே உள்ள நப்லஸ் நகரில் பழைய
 விமானத்தில் ஓட்டல் இரட்டையர்கள் அசத்தல்

ரமல்லா:மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில், பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி, தங்கள் நீண்ட நாள் கனவை இரட்டை சகோதரர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் எந்த விமான நிலையமும் இல்லை. விமானத்தில் செல்ல வேண்டுமானால் அண்டை நாடான ஜோர்டானுக்குத் தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பாலஸ்தீனத்தின் வடக்கே உள்ள நப்லஸ் நகரில் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி, மக்களின் ஆசையுடன், தங்கள் நீண்ட நாள் கனவையும் இரட்டை சகோதரர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த கமிஸ் அல்சராபி மற்றும் அவரது சகோதரர் அடா, 60, அங்கு பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் பொழுதுபோக்கு சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். இதற்காக நிலத்தை வாங்கினர். விமானத்தில் ஓட்டல் நடத்த வேண்டும் என்பதும் அவர்களது கனவு.கடந்த 1961 - 1993 வரை இஸ்ரேல் அரசு பயன்படுத்தி வந்த போயிங் 707 விமானத்தை இவர்கள் வாங்கியுள்ளனர்.

கடந்த 1990களின் இறுதியில் வாங்கிய அந்த விமானத்தை கடும் போராட்டத்துக்குப் பின் தங்களுடைய இடத்துக்கு எடுத்து வந்துள்ளனர்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரால் இவர்களுடைய திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விமானத்தை ஓட்டலாக்க மீண்டும் முயற்சி மேற்கொண்டனர். கொரோனாவால் அதில் பாதிப்பு ஏற்பட்டது.

கடும் போராட்டங்களுக்குப் பின், விமான ஓட்டலை அவர்கள் சமீபத்தில் திறந்துள்ளனர். இதில் சாப்பிடுவதைவிட அதை பார்ப்பதற்காக பலரும் வந்து செல்கின்றனர்.'பாலஸ்தீனத்தில் 99 சதவீதம் பேர் விமானத்தில் பயணம் மேற்கொண்டதில்லை. தற்போது விமானத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு மற்றும் அதில் அமரும் வாய்ப்பு பாலஸ்தீன மக்களுக்கு கிடைத்துள்ளது' என, சகோதரர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X