உயரத்தில் மெயின் ரோடு... பள்ளத்தில் தெரு ரோடு; அல்லல்படும் ஆத்திபட்டி புறநகர் பகுதி மக்கள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மெயின் ரோடு உயரமாக இருப்பதால் பள்ளமாக உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறுவதால்,அருப்புக்கோட்டை ஆத்திபட்டி புறநகர் பகுதி மக்கள் அல்லல்படுகின்றனர்.இப்பகுதி அல்லி தெரு, காவ்யன் நகர் உட்பட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. இப்பகுதிகளுக்கு செல்லும் செம்பட்டி மெயின் ரோடு உயரமாக இருப்பதால், ரோடு அருகே உள்ள தாழ்வாக

அருப்புக்கோட்டை : மெயின் ரோடு உயரமாக இருப்பதால் பள்ளமாக உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறுவதால்,அருப்புக்கோட்டை ஆத்திபட்டி புறநகர் பகுதி மக்கள் அல்லல்படுகின்றனர்.

இப்பகுதி அல்லி தெரு, காவ்யன் நகர் உட்பட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. இப்பகுதிகளுக்கு செல்லும் செம்பட்டி மெயின் ரோடு உயரமாக இருப்பதால், ரோடு அருகே உள்ள தாழ்வாக இருக்கும் தெருக்கள் மழை காலத்தில் வெள்ளக் காடாக மாறி விடுகிறது. மெயின் ரோட்டில் சாக்கடைகள் சேதமடைந்தும், முட்புதர்கள் முளைத்தும் இருப்பதால் கழிவு நீர் வெளியேற முடியாது தேங்கி கிடக்கிறது.

மழை காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி, தெருக்களில் தேங்கி விடுகிறது. இதை கருதி மெயின் ரோட்டை அகலப்படுத்தி சீராக்க வேண்டும்.அல்லி தெருவில் ரோடு வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி குளமாக உள்ளது. முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களை கூட வீட்டை விட்டு வெளியில் கொண்டு வர முடியவில்லை.

பல தெருக்களில் ரோடு, சாக்கடை அமைக்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை, வாறுகால் சுத்தம் செய்வதில்லை என்பத மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கொசு மருந்து அடிக்கடி அடிப்பதோடு, வாரத்தில் 2 நாட்களாவது சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X