பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயம், கிராமப்புற தொழில்களுக்கு முன்னுரிமை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
எத்தனை கிளைகள் உள்ளன1977ல் துவங்கப்பட்ட பாண்டியன் வங்கி, 1988 ல் துவங்கப்பட்ட பல்லவன் வங்கி இரண்டையும் 2019 ல் இணைத்து தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டுவருகிறது. தமிழகமெங்கும் 640 கிளைகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 37 கிளைகள் உள்ளன.வங்கியின் நோக்கம்பெரும்பாலும் வங்கிகள் நகர்புற மக்கள் எளிதில் அனுகும் வகையில் இயங்கி வரும். ஆனால் கிராம மக்களுக்கு சேவை வழங்கும்

எத்தனை கிளைகள் உள்ளன

1977ல் துவங்கப்பட்ட பாண்டியன் வங்கி, 1988 ல் துவங்கப்பட்ட பல்லவன் வங்கி இரண்டையும் 2019 ல் இணைத்து தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டுவருகிறது. தமிழகமெங்கும் 640 கிளைகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 37 கிளைகள் உள்ளன.

வங்கியின் நோக்கம்

பெரும்பாலும் வங்கிகள் நகர்புற மக்கள் எளிதில் அனுகும் வகையில் இயங்கி வரும். ஆனால் கிராம மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டது தான் கிராம வங்கி. கிராம மக்களுக்கு எளிதில் சேமிப்பு, கடன் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறோம். எங்கள் வங்கியின் சேவையை மக்கள் விரும்பியதால் நகர்புறங்களிலும் கிளைகள் அமைத்து விவசாயம், தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம்.

வங்கியின் செயல்பாடுகள்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே எங்கள் வங்கியில் கணக்கு துவங்கி கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்., அட்டை, பாதுகாப்பு பெட்டக வசதி, கடன் வசதி என எல்லாமே உள்ளது. ஏ.டி.எம். ,கார்டு பயன்படுத்தி எல்லா ஏ.டி.எம் களிலும் பணம் பெற்றுக்கொள்ளலாம். எங்கள் வங்கி இந்தியன் வங்கியின் கூட்டு நிறுவன வங்கியாகும். தாய் வங்கியான இந்தியன் வங்கியின் மூலம் ஏ.டி.எம்.,கார்டு வழங்கப்படுகிறது.

வங்கியின் சேவைகள்

பயிர்கடன், வேளாண்தொழில்கள், கிராம கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கிவருகிறோம். வீட்டுக்கடன், வாகன கடன், அடமானகடன், நகைக்கடன் என பல வித கடன் உதவிகள், அனைத்து கிளைகளிலும் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படுகிறது.

பிரத்யேக சேவைகள்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, பிரதம மந்திரி ஸ்வரக்ஷா பீம யோஜனா உட்பட மத்திய அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் எங்கள் வங்கியால் செயல்படுத்தப்படுகிறது.

அடல்ட் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மக்கள் பங்கு

அனைவருக்கும் இளமை காலத்திற்கு பின் வருமானத்தை பற்றிய ஒரு பயம் இருக்கும். அடல்ட் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் மாதம் ஒரு சிறு தொகையை கட்டி வர வேண்டும். 60 வயதானதும் சேர்த்து வைத்த தொகை மொத்தமாக கிடைப்பதோடு நாம் கட்டிய தொகைக்கு ஏற்ப நமக்கு பென்ஷனும் கிடைக்கும். இது பலருக்கும் பயன் அளிக்க கூடிய திட்டம்.

இது தவிர்த்து சுய தொழில் புரிய விரும்பும் இளைஞர்களுக்கும் கடன் உதவி வழங்கக்கூடிய திட்டங்களும் உள்ளன.

வங்கியின் பலம்

வங்கியில் 2020ல் நடந்த வணிகம் ரூ. 30 ஆயிரத்து 578 கோடி. அதில் நிகர லாபம் ரூ. 184 கோடி. எங்கள் வங்கி லாபத்தில் செயல்பட்டு வரும் வங்கி. இது தவிர நிரந்தர வைப்பு தொகைகளின் மீது பிற வங்கிகளை காட்டிலும் அதிகபட்சமாக 5.75 சதவீதம் வட்டி வழங்குகிறோம். மூத்த குடிமக்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைகளின் மீது அதிகபட்சமாக 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறோம். இது எங்களின் மிகப்பெரிய பலம். மேலும் வங்கி வழங்கும் சேவைகள் குறித்து மக்களுக்கு செயல்விளக்க ஊர்தி மூலமாக விளக்கம் கொடுத்து வருகிறோம்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X