சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியருக்கு 16 மாத சிறை தண்டனை | Dinamalar

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியருக்கு 16 மாத சிறை தண்டனை

Added : ஆக 27, 2021
Share
சிங்கப்பூர்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழக இளைஞருக்கு, இளம்பெண்களை விபசாரத்துக்கு வற்புறுத்திய வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்தது.ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிப்பவர் அருமைக்கண்ணு சசிகுமார், 46. தமிழகத்தைச் சேர்ந்த இவர், சிங்கப்பூரின் நிரந்த குடியுரிமை பெற்றுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் நாகரத்தினம், 60. இருவரும் சேர்ந்து

சிங்கப்பூர்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழக இளைஞருக்கு, இளம்பெண்களை விபசாரத்துக்கு வற்புறுத்திய வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்தது.

ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிப்பவர் அருமைக்கண்ணு சசிகுமார், 46. தமிழகத்தைச் சேர்ந்த இவர், சிங்கப்பூரின் நிரந்த குடியுரிமை பெற்றுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் நாகரத்தினம், 60. இருவரும் சேர்ந்து 'கோலிவுட் கிளப்' என்ற பெயரில் டான்ஸ் கிளப் நடத்தினர். கடந்த 2016ல், வங்க தேசத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் சிங்கப்பூர் வந்தனர்.

டான்ஸ் கிளப்பில் வேலைக்கு சேர்ந்த இருவரையும் சசிகுமாரும், நாகரத்தினமும் சேர்ந்து விபசார தொழிலுக்கு வற்புறுத்தியுள்ளனர். சம்பளமும் தராமல் அந்தப் பெண்களை அடித்து உதைத்துள்ளனர்.இது தொடர்பான வழக்கில் நாகரத்தினத்துக்கு 19 மாத சிறைத் தண்டனை, 1.37 லட்சம் ரூபாய் அபராதம்; சசிகுமாருக்கு 16 மாத சிறை, 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X