கல்லுாரி மாணவி பலாத்காரம்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெங்களூரூ:இரவு நேரத்தில் தனிமையான இடத்துக்கு கல்லுாரி மாணவரும், மாணவியும் சென்றிருக்க கூடாது என, கல்லுாரி மாணவி பலாத்கார விவகாரத்தில் தான் கூறிய கருத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா வாபஸ் பெற்றார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மைசூரூ கல்லுாரியில் படித்து வருகிறார்.
 கல்லுாரி மாணவி பலாத்காரம்

பெங்களூரூ:இரவு நேரத்தில் தனிமையான இடத்துக்கு கல்லுாரி மாணவரும், மாணவியும் சென்றிருக்க கூடாது என, கல்லுாரி மாணவி பலாத்கார விவகாரத்தில் தான் கூறிய கருத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா வாபஸ் பெற்றார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மைசூரூ கல்லுாரியில் படித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடன் படிக்கும் ஆண் மாணவருடன், மைசூரூ சாமுண்டி மலைக்கு இரவில் சென்றார். அங்குள்ள காட்டுப் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். பின்தொடர்ந்து வந்த கும்பல், அந்த மாணவரை கடுமையாக தாக்கி மாணவியை பலாத்காரம் செய்தது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்., உட்பட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.இதுதொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கூறுகையில், ''கல்லூரி மாணவி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இரவு நேரத்தில் அந்த மாணவரும், மாணவியும் சாமுண்டி மலைப் பகுதியில் தனிமையான இடத்துக்கு சென்றிருக்க கூடாது,'' என்றார்.

அமைச்சரின் இந்த பேட்டியால் கர்நாடக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் அரகா ஞானேந்திரா வெளியிட்ட அறிக்கை:நான் கூறிய கருத்தை வாபஸ் பெறுகிறேன். என் கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். அந்த மாணவி இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. நினைவு வந்ததும் அவரிடம் விசாரித்து குற்றவாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
01-செப்-202110:43:12 IST Report Abuse
KavikumarRam அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? அமைச்சரின் இந்த பேட்டியால் கர்நாடக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுக்கு எதுக்கு இவனுங்க அதிர்ச்சி ஆகுறாங்க.
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
30-ஆக-202116:58:03 IST Report Abuse
Vijai அவர் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது? ஒவ்வொரு மீட்டருக்கும் போலீசை நிறுத்த முடியுமா என்ன? நாம் தான் நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
30-ஆக-202113:43:53 IST Report Abuse
HSR இந்த காங்கிரஸ் திமுக இருக்கிறவரைக்கும் நல்லது சொன்னால் கூட மன்னிப்பு கேட்கும் நிலைதான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X