கல்லுாரி மாணவி பலாத்காரம் | Dinamalar

கல்லுாரி மாணவி பலாத்காரம்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (12)
Share
பெங்களூரூ:இரவு நேரத்தில் தனிமையான இடத்துக்கு கல்லுாரி மாணவரும், மாணவியும் சென்றிருக்க கூடாது என, கல்லுாரி மாணவி பலாத்கார விவகாரத்தில் தான் கூறிய கருத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா வாபஸ் பெற்றார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மைசூரூ கல்லுாரியில் படித்து வருகிறார்.
 கல்லுாரி மாணவி பலாத்காரம்

பெங்களூரூ:இரவு நேரத்தில் தனிமையான இடத்துக்கு கல்லுாரி மாணவரும், மாணவியும் சென்றிருக்க கூடாது என, கல்லுாரி மாணவி பலாத்கார விவகாரத்தில் தான் கூறிய கருத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா வாபஸ் பெற்றார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மைசூரூ கல்லுாரியில் படித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடன் படிக்கும் ஆண் மாணவருடன், மைசூரூ சாமுண்டி மலைக்கு இரவில் சென்றார். அங்குள்ள காட்டுப் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். பின்தொடர்ந்து வந்த கும்பல், அந்த மாணவரை கடுமையாக தாக்கி மாணவியை பலாத்காரம் செய்தது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்., உட்பட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.இதுதொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கூறுகையில், ''கல்லூரி மாணவி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இரவு நேரத்தில் அந்த மாணவரும், மாணவியும் சாமுண்டி மலைப் பகுதியில் தனிமையான இடத்துக்கு சென்றிருக்க கூடாது,'' என்றார்.

அமைச்சரின் இந்த பேட்டியால் கர்நாடக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் அரகா ஞானேந்திரா வெளியிட்ட அறிக்கை:நான் கூறிய கருத்தை வாபஸ் பெறுகிறேன். என் கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். அந்த மாணவி இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. நினைவு வந்ததும் அவரிடம் விசாரித்து குற்றவாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X