கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி: ஐகோர்ட்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதற்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க 2016ல், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டப்படி, மாற்றுத்

சென்னை:தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதற்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க 2016ல், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், பஸ்கள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி என்பவர் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '10 சதவீத பஸ்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் உடையதாக கொள்முதல் செய்யப்படும் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 'சட்டப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பஸ்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற போதும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடனான பஸ்களின் விலை எவ்வளவு; அதை கொள்முதல் செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வசதிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்குமான வசதிகளுடனும் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X