கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலா ரூ.48 லட்சம் வரி பாக்கி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:'சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டதால், 48 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்துவதற்கான உத்தரவை கைவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்தது தொடர்பாக, வருமான வரித் துறைக்கு, 2008ல் லஞ்ச ஒழிப்பு துறை பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையில், 1994 - 95ம் நிதியாண்டில் 20க்கும்

சென்னை:'சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டதால், 48 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்துவதற்கான உத்தரவை கைவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்தது தொடர்பாக, வருமான வரித் துறைக்கு, 2008ல் லஞ்ச ஒழிப்பு துறை பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையில், 1994 - 95ம் நிதியாண்டில் 20க்கும் மேற்பட்ட சொத்துக்கள் தொடர்பான வருமானத்திற்கு 48 லட்சம் ரூபாய் வரி செலுத்த, சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சசிகலா தொடர்ந்த வழக்கை விசாரித்த, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வரி செலுத்தும்படி சசிகலாவுக்கு, வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.தள்ளிவைப்புஇதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது. 2008ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், 2020ல் சசிகலா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், '1 கோடி ரூபாய்; அதற்கு கீழ் உள்ள வருமான வரி நிலுவை அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால், தனக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற, வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சசிகலா மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி டி.எஸ்.சிவஞானம், எஸ்.சத்திகுமார் ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித் துறை தரப்பில், 'சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா தண்டிக்கப்பட்டதால், வரி அல்லது அபராதம் வசூலிப்பதை கைவிடும் சுற்றறிக்கை அவருக்கு பொருந்தாது' என, தெரிவிக்கப்பட்டது.இதற்கு, சசிகலா தரப்பில், 'சுற்றறிக்கை பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய, சசிகலா தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்., 8க்கு தள்ளி வைத்தனர்.


'நோட்டீஸ்'

நடிகர் ரஜினி, 2002 முதல் 2005 வரை, வருமான வரியை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் வரியை செலுத்துமாறு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ், நேரடி வரி விதிப்பு வாரிய சுற்றறிக்கையின்படி, 2020 ஆகஸ்டில் வருமான வரித் துறை திரும்பப் பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X