சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் கூடும் கொரோனா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கம்பம்:கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேனி மாவட்ட எல்லையோர கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனை சாவடிகளில் தமிழக சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அம்மாநிலத்தில் இருந்து வருவோர் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என உறுதி செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.கேரளாவில் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது. எல்லைகளில் கூடுதல் பணியாளர்கள்

கம்பம்:கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேனி மாவட்ட எல்லையோர கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனை சாவடிகளில் தமிழக சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அம்மாநிலத்தில் இருந்து வருவோர் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என உறுதி செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.கேரளாவில் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது. எல்லைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கேரளாவிலிருந்து வருபவர்களிடம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.

சம்பந்தப்பட்டவர்களின் அலைபேசி எண், ஆதார் எண், டிரைவிங் லைசென்ஸ், முகவரி, புறப்பட்ட இடம், செல்லும் இடம் குறித்து விபரம் சேகரிக்கின்றனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரும் இணைந்து பணி செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். இருமாநிலங்களுக்கு இடையே சென்று வருபவர்களை முழுமையாக பரிசோதித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X