பொது செய்தி

தமிழ்நாடு

தபாலில் பழநி பிரசாதம் மீண்டும் துவக்கம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:'பழநி பிரசாதத்தை தபாலில் பெறும் வசதி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது' என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.அவர் தெரிவித்தது:கொரோனாவால் கோயிலுக்கு வருபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் வசதிக்காக தபால் துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்துடன் இணைந்து

திண்டுக்கல்:'பழநி பிரசாதத்தை தபாலில் பெறும் வசதி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது' என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.அவர் தெரிவித்தது:

கொரோனாவால் கோயிலுக்கு வருபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் வசதிக்காக தபால் துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்துடன் இணைந்து பிரசாதங்களை தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

அரை கிலோ பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார முருகன் படம், இயற்கையாக தயாரிக்கப்பட்ட 10 கிராம் விபூதி அடங்கிய பிரசாதம் விரைவு தபாலில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனாவால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பழநி பிரசாதம் தேவைப்படுவோர் அருகேயுள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X