சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறு தொழில்களுக்கு ரூ.524 கோடி நிதியுதவி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுதிகளை மேம்படுத்த, 524 கோடி ரூபாய் நிதி உதவிக்கான ஒப்புதல் கடிதம், முதல்வரிடம் வழங்கப்பட்டது.மத்திய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் ராமன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின், தொகுதி

சென்னை:சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுதிகளை மேம்படுத்த, 524 கோடி ரூபாய் நிதி உதவிக்கான ஒப்புதல் கடிதம், முதல்வரிடம் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் ராமன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின், தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த, 524 கோடி ரூபாய் நிதி உதவிக்கான, கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.

முதல் கட்டமாக இந்நிதி வழங்கப்படுகிறது. திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும், கூடுதல் நிதி வழங்கப்படும் என, சிவசுப்பிரமணியன் ராமன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில், இந்தியாவில் முதல் மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசன், தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X