சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் தொற்று அதிகரிப்பு எல்லையில் தீவிர கண்காணிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஊட்டி:கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது, 400க்கு குறைவானோர், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், 90 சதவீதத்துக்கு மேல், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு

ஊட்டி:கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது, 400க்கு குறைவானோர், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், 90 சதவீதத்துக்கு மேல், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.இந்நிலையில், கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பின், தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.

அங்கிருந்து நீலகிரி வரும் மக்களால், நோய் பரவும் அபாயம் உள்ளது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''கேரளாவில் தொற்று அதிகரித்துள்ளதால், எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், சிறப்பு குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சான்று இல்லாதவர்கள் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

குமுளி: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேனி மாவட்ட எல்லையோரம் கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனை சாவடிகளில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவிலிருந்து வருபவர்களிடம் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களின் அலைபேசி எண், ஆதார் எண், முகவரி, புறப்பட்ட இடம், செல்லும் இடம் குறித்து விபரம் சேகரிக்கின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே சென்று வருபவர்களை முழுமையாக பரிசோதித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X