5 மரங்களை வெட்டியதற்காக 100 மரக்கன்றுகளை நட வேண்டும்: ஊராட்சிக்கு தேனி மக்கள் நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 மரங்களை வெட்டியதற்காக 100 மரக்கன்றுகளை நட வேண்டும்: ஊராட்சிக்கு தேனி மக்கள் நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 27, 2021
Share
தேனி:“தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தில் அவசியமின்றி 5 மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகம் பயன்தரக்கூடிய 100 மரக்கன்றுகளை 30 நாட்களுக்குள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,' என தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளதுஸ்ரீரெங்காபுரம் பள்ளித்தெரு சதீஷ்குமார் 29. சென்னை இன்ஜினியர். தற்போது வீட்டில் இருந்து பணி செய்கிறார். நண்பர்கள்

தேனி:“தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தில் அவசியமின்றி 5 மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகம் பயன்தரக்கூடிய 100 மரக்கன்றுகளை 30 நாட்களுக்குள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,' என தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது

ஸ்ரீரெங்காபுரம் பள்ளித்தெரு சதீஷ்குமார் 29. சென்னை இன்ஜினியர். தற்போது வீட்டில் இருந்து பணி செய்கிறார். நண்பர்கள் 40 பேர் இணைந்து 2009ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் ஊராட்சியின் மைதானப் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் முன்னிலையில் 22 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தனர். 12 மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.

இந்நிலையில் ஜூலை 8ல் மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என, ஊராட்சி நிர்வாகம் கிளைகளை மட்டுமே வெட்ட அனுமதி அளித்த நிலையில் ஊராட்சி கூடுதல் கட்டடத்தில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் நாவல், 2 வாகை , வேம்பு, அரச மரங்கள் என மொத்தம் 5 மரங்கள் வெட்டப்பட்டன.இதுகுறித்து சதீஷ்குமார் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை.

ஜூலை 12ல் தேனி எஸ்.பி.,க்கு ஆன்-லைனில் புகார் அனுப்பினார். வீரபாண்டி ஸ்டேஷனில் ஜூலை 13ல் விசாரணை நடந்து தீர்வு காணப்படவில்லை. இதனால் ஜூலை 15ல் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.உத்தரவுஇதுகுறித்து பொது சேவை பயன்பாட்டிற்காக நிரந்தர தீர்ப்பாயம் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சித் தலைவர் பெருமாள், எழுத்தர் சுருளி, தேனி உதவி மின் பொறியாளர் புனிதபத்பநாபன், தாடிச்சேரி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், நேரில் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

தொடர் விசாரணை நிரந்தர மக்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆக., 25ல் நடந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி முகமதுஜியாவுதீன், “அவசியம் இன்றி மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு ஈடாக ஊராட்சி நிர்வாகம் 100 மரக்கன்றுகளை ஒரு மாதத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும். அதனை தாடிச்சேரி வி.ஏ.ஓ., உறுதிப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என,''விழிப்புணர்வு தீர்ப்பளித்தார். விசாரணையில் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் பிரதாப்சிங், குமரேசன் உடனிருந்தனர்.

மண்ணைப் போட்டு மூடிய மரத்தின் 'துார்ப்பகுதி'

தேனி அருகே ஸ்ரீரெங்கபுரம் முதியவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது வீட்டிற்கு முன் இடையூறாக இருந்த நாவல் மரத்தை ஊராட்சி அனுமதி இன்றி வெட்டியது கண்டறியப்பட்டது. இதனால் தாடிச்சேரி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், ஊராட்சி அறிவுறுத்தலில் தனது வீட்டின் முன் நான்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார்.

அதற்கு அருகில் உள்ள வீட்டின் வாசலில் வெட்டப்பட்ட வாகை மரத்தின் அடிப்பகுதி மேலே தெரியாமல் மண்ணை போட்டு மூடப்பட்டுள்ளது.::15 நாட்களில் நடவுப்பணிஊராட்சி தலைவர் பெருமாள் கூறியதாவது: வெட்டப்பட்ட 1.5 டன் அளவுள்ள மரக்கட்டைகள் நீதிமன்ற உத்தரவுப் படி ஊராட்சி ஒருங்கிணைந்த வளாகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

தேனி தாசில்தார் மேற்பார்வையில் முறைப்படி ஏலம் விடப்படும். குறிப்பாக மைதானத்தில் 10 மரக்கன்றுகளும், வெங்கடாசலபுரம் செல்லும் ரோட்டில் 90 மரக்கன்றுகளும் நட்டு பராமரிக்க முடிவு செய்துள்ளோம். பணிகள் 15 நாளில் முடிக்கப்பட்டு விரைவில் வி.ஏ.ஓ., மூலம் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

ஒரே நாளில் தீர்ப்பு

நீதிபதி முகமதுஜியாவுதீன் கூறியதாவது:தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பொது பயன்பாட்டு சேவைகளுக்கான தீர்ப்பாயத்தில் இதுவரை 6 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இந்த மரம் வெட்டப்பட்ட வழக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, அதிகளவில் இதுமாதிரியான பிரச்னைகளுக்கு தீர்வுகாண தீர்ப்பாயத்தில் இலவசமாக மனு செய்து பயன் பெறலாம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X