சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மார்க்கெட் ஏல சந்தை மூடல் காய்கறி வெளியூர் செல்வதில் சிரமம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி மார்க்கெட் ஏல சந்தை மூடப்பட்டதால், மலை காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், மலை காய்கறிகளை ஊட்டி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஊட்டி மார்க்கெட்டில் வாடகை நிலுவை பாக்கி எதிரொலியாக நேற்று முன்தினம், 270 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. 100 டன் அளவுவிவசாயிகள் கொண்டு வந்த
 ஊட்டி மார்க்கெட் ஏல சந்தை மூடல்  காய்கறி வெளியூர் செல்வதில் சிரமம்

ஊட்டி:ஊட்டி மார்க்கெட் ஏல சந்தை மூடப்பட்டதால், மலை காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், மலை காய்கறிகளை ஊட்டி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஊட்டி மார்க்கெட்டில் வாடகை நிலுவை பாக்கி எதிரொலியாக நேற்று முன்தினம், 270 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. 100 டன் அளவுவிவசாயிகள் கொண்டு வந்த மலை காய்கறிகள் சந்தையில் ஏலம் விட முடியவில்லை. மார்க்கெட் வளாகத்தில் நேற்று முன்தினம் இறக்கி வைக்கப்பட்ட காய்கறிகளை போலீசார், விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.

அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.பொதுவாக, மார்க்கெட்டுக்கு தினசரி சராசரியாக, 100 டன் அளவுக்கு மலை காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. நேற்று, மார்க்கெட் மூடப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் அறுவடைக்கு தயாரான மலை காய்கறிகளை தோட்டத்தில் இருந்து எடுக்கவில்லை.சிலர் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு சென்றனர்.


மாற்று ஏற்பாடு

விவசாயிகள் கூறுகையில், 'ஊட்டி ஏல சந்தை மூடப்பட்டதால், மலை காய்கறிகளை பிற இடங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. 'இந்த பிரச்னை தொடரும் பட்சத்தில், காய்கறிகளை விற்க மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X