சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெட்டுப்போன மீன் அழித்த அதிகாரிகள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருச்சி,:திருச்சி மீன்மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன, 650 கிலோ மீன்களை, உணவு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.திருச்சி, உறையூர் பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரையில் மீன்கள் விற்கப்படுகின்றன.நேற்று காலை மீன் மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர்
 கெட்டுப்போன மீன் அழித்த அதிகாரிகள்

திருச்சி,:திருச்சி மீன்மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன, 650 கிலோ மீன்களை, உணவு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருச்சி, உறையூர் பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரையில் மீன்கள் விற்கப்படுகின்றன.நேற்று காலை மீன் மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு, மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஐந்து மொத்த விற்பனை கடைகள், ஒன்பது சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மூன்று கன்டெய்னர் லாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், கெட்டுப்போன, 300 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் ஆபத்தான வேதிப்பொருள் பார்மலின் தடவிய 350 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு, அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன்கள் அனைத்தையும், அதே பகுதியில் கொட்டி அழித்தனர்.

'இதுபோன்று உடல்நலம் பாதிக்கும் வகையிலான மீன்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மீன் வியாபாரிகளை, அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X