கோர்ட் செய்தி

தமிழ்நாடு

2 மான்கள் மாயம்: ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை:தஞ்சாவூர் மாநகராட்சி பூங்காவிலிருந்து கோடியக்கரைக்கு இடமாறுதல் செய்ததில் இரு மான்கள் மாயமானதாக நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூரை சேர்ந்த மனோகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான சிவகங்கை பூங்கா உள்ளது. இதில் கிளிகள், முயல்கள், மான்கள் உட்பட பல்வேறு

மதுரை:தஞ்சாவூர் மாநகராட்சி பூங்காவிலிருந்து கோடியக்கரைக்கு இடமாறுதல் செய்ததில் இரு மான்கள் மாயமானதாக நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூரை சேர்ந்த மனோகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான சிவகங்கை பூங்கா உள்ளது. இதில் கிளிகள், முயல்கள், மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள், பறவைகள் இருந்தன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட மேம்பாட்டுப் பணிக்காக 2019 ல் பூங்கா மூடப்பட்டது. விலங்குகள், பறவைகளை கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

எத்தனை விலங்குகள் கோடியக்கரைக்கு மாற்றப்பட்டன என தகவல் உரிமைச் சட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியிடம் விபரம் கோரினேன். 43 மான்கள் உள்ளிட்ட விலங்குகள் இடமாறுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் விபரம் கோரினேன். கோடியக்கரைக்கு 41 மான்களை மாற்றியதாக தெரிவித்தது. இரு தகவல்கள் அடிப்படையில் மான்களின் எண்ணிக்கை மாறுபாடுகிறது. இரண்டு மான்கள் மாயமாகி விட்டன.இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்குகளை இடமாறுதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர், மாவட்ட வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி, அக்.,7 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X