சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த முத்துராஜ் மனைவி சுதா 35; ஆசிரியை. ஆக., 23ல் திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்றார். கயத்தாறு அருகே கைப்பையில் வைத்திருந்த, 20 பவுன் நகைகள் திருடு போயின. இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில், தனிப்படையினர் விசாரித்தனர். நகையை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த முத்துராஜ் மனைவி சுதா 35; ஆசிரியை. ஆக., 23ல் திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்றார்.

கயத்தாறு அருகே கைப்பையில் வைத்திருந்த, 20 பவுன் நகைகள் திருடு போயின. இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில், தனிப்படையினர் விசாரித்தனர். நகையை திருடியது கயத்தாறு பஸ் ஸ்டாப்பில் இறங்கிய துாத்துக் குடியை சேர்ந்த காளியம்மாள், 23, முத்துமாரி, 22, என, 'சிசிடிவி' காட்சிகளில் தெரியவந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நகையை கொடுத்து வைத்த அம்பாசமுத்திரம் ஐயப்பனும் கைது செய்யப்பட்டார். அவர்கள், வேறு இடங்களில் திருடியது உட்பட, 35 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X