சேற்றில் சிக்கி மாணவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேற்றில் சிக்கி மாணவன் பலி

Added : ஆக 27, 2021
Share
விருத்தாசலம்:சேற்றில் சிக்கி மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அருண்குமார், 16; அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று மாலை, அருண்குமார் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, பந்து அப்பகுதியில் இருந்த வடிகால் வாய்க்காலில்

விருத்தாசலம்:சேற்றில் சிக்கி மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அருண்குமார், 16; அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று மாலை, அருண்குமார் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது, பந்து அப்பகுதியில் இருந்த வடிகால் வாய்க்காலில் விழுந்தது. விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை விரிவாக்க பணிக்காக, தோண்டப்பட்ட மண், வாய்க்காலில் கொட்டியிருந்ததால் ஓடையில் தேங்கியிருந்த தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்தது. வாய்க்காலில் விழுந்த பந்தை எடுக்க குதித்த அருண்குமார், சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X