சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் விவகாரம்: கார்பென்டரை கடத்திய மூவர் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், பண விவகாரத்தில், கார்பென்டரை காரில் கடத்திய, சேலத்தை சேர்ந்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் அம்பலவாணன், 45, கார்பென்டர்; சேலத்தில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவரது நண்பர், சேலம் கிழக்கு திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த ஜோசப், 50. இவரது வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து, 30 லட்சம் ரூபாய் வங்கியில்
 கடன் விவகாரம்: கார்பென்டரை கடத்திய மூவர் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், பண விவகாரத்தில், கார்பென்டரை காரில் கடத்திய, சேலத்தை சேர்ந்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் அம்பலவாணன், 45, கார்பென்டர்; சேலத்தில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவரது நண்பர், சேலம் கிழக்கு திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த ஜோசப், 50. இவரது வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து, 30 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்று இருவரும் பங்கிட்டுள்ளனர்.

கடனை அடைக்க முடியாததால், சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சரவணன், 40, என்பவரிடம், 30 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, வீட்டை மீட்டுள்ளனர். வாங்கிய கடனை கொடுக்காததால், ஜோசப், அம்பலவாணன் தரப்புக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 25ம் தேதி இரவு தன் பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்த அம்பலவாணனை, சரவணனும் மற்றும் இருவரும் காரில் கடத்தினர்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தகவலின்படி, சேலம் ரெட்டிப்பட்டி அருகே, சூரமங்கலம் போலீசார் காரை மடக்கி, அதிலிருந்த மூவரை பிடித்து, அம்பலவாணனை மீட்டனர்.

அவரது புகார்படி, சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சரவணன், 40, சந்தோஷ், 24, ஷாஜன், 28, ஆகியோரை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X