சீன கடன் செயலியின் ரூ.107 கோடி முடக்கம்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக இந்தியாவில் இயங்கும் சீன வங்கி சாரா நிதி நிறுவனத்தின் 107 கோடி ரூபாயை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த ஏராளமானோர், உடனடியாக கடன் தரும் அலைபேசி செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் பெற்றனர்.கடன்தாரரின் சொந்த விபரங்களை பயன்படுத்தியும், பல வகையில்
ED, microloan scam, Cash Bean, FEMA, private company

புதுடில்லி : அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக இந்தியாவில் இயங்கும் சீன வங்கி சாரா நிதி நிறுவனத்தின் 107 கோடி ரூபாயை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த ஏராளமானோர், உடனடியாக கடன் தரும் அலைபேசி செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் பெற்றனர்.கடன்தாரரின் சொந்த விபரங்களை பயன்படுத்தியும், பல வகையில் மிரட்டல் விடுத்தும் இந்த கடன் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இது குறித்த விசாரணையின் போது, 'கேஷ்பீன்' என்ற அலைபேசி கடன் செயலியை நிர்வகிக்கும், பி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


latest tamil news


இது பற்றி அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் 2002ல் துவக்கப்பட்ட பி.சி.,பைனான்சியல் நிறுவனத்தின் நிர்வாகத்தை சீனாவைச் சேர்ந்த ஜோ யாவூய் என்பவரின் ஹாங்காங் நிறுவனங்கள் 2018ல் கைப்பற்றியுள்ளன. இதற்காக இந்தியாவில் 173 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுகிய காலத்தில் 429 கோடி ரூபாய் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை, தொழில்நுட்ப உதவி, விளம்பரம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மென்பொருள்களும், சேவைகளும் இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கின்றன. அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய பணத்திற்கு முறையான ஆவணங்களையும், நிறுவனத்தால் அளிக்க முடியவில்லை. எனவே சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய குற்றச்சாட்டில் பி.சி.,பைனான்சியல் நிறுவனத்தின் 107 கோடி ரூபாய் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது. விரைவில் செயலியின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202106:18:21 IST Report Abuse
அப்புசாமி நம்ம ஆளுங்க கிட்டே கடன் குடுத்தால் திரும்ப வாங்கவே முடியாதே... எப்பிடி இவிங்களை நம்பி கடன் குடுத்தாங்க?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202106:01:18 IST Report Abuse
Kasimani Baskaran புதுவகை பணச்சலவை.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
27-ஆக-202105:29:19 IST Report Abuse
Neutral Umpire ஆன் லைன் ரம்மி எப்போ தடை செய்யப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X