சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் திருட்டு வழக்கில் ஈரான் ஆசாமிகள் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் 2 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி மாலை 6:15 மணிக்கு வந்த 3 வாலிபர்கள், அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியரிடம் மணியார்டர் அனுப்ப வேண்டுமென கூறியுள்ளனர். நேரம் முடிந்து விட்டது என கூறிய அந்த ஊழியரிடம், 2,000

விழுப்புரம்,-விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் 2 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி மாலை 6:15 மணிக்கு வந்த 3 வாலிபர்கள், அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியரிடம் மணியார்டர் அனுப்ப வேண்டுமென கூறியுள்ளனர். நேரம் முடிந்து விட்டது என கூறிய அந்த ஊழியரிடம், 2,000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர் சில்லரை இல்லை எனக் கூறி அங்குள்ள கருவூல அறைக்குச் சென்று வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.அங்கு சென்ற மூவரும், கருவூல அறையில் வசூலான பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்த அலுவலரிடம் சில்லரை கேட்டு, கவனத்தை திசை திருப்பி, மேஜையில் இருந்த நுாறு தாள்கள் அடங்கிய 2,000 ரூபாய் கட்டு ஒன்றை திருடிச் சென்றனர்.இதுகுறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது மகன் ஷியாவல், 20; ருசன் மகன் ரோஸ்டம் சையிதி, 28; டில்லி, நிஜாமுதீன் பகுதியைச் சேர்ந்த ரகுமான் யூனஸ் அலிபனா, 56; ஆகியோரை புழல் சிறையில் அடைத்தனர்.மேலும், மூவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என கருதி சிறையில் இருந்து, ஆயிரம் விளக்கு போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அதில், மூவரும் விழுப்புரம் தபால் நிலையத்தில் 2 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில் தேடப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று, சென்னை சென்ற போலீசார், விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதை உறுதி செய்து, மூவரையும் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X