சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் பெற்றோரை தாக்கிய அண்ணனை கொன்ற தம்பி கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பெண்ணாடம்,-போதையில் பெற்றோரை தாக்கிய அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் காலனியைச் சேர்ந்தவர் கவர்னர், 57; கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன் கார்த்திகேயன், 30; வெல்டர். திருமணம் ஆகாதவர். இளைய மகன் கவியரசன், 21, அரியலுார் மாவட்டத்தில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்தார். காதல்

பெண்ணாடம்,-போதையில் பெற்றோரை தாக்கிய அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் காலனியைச் சேர்ந்தவர் கவர்னர், 57; கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன் கார்த்திகேயன், 30; வெல்டர். திருமணம் ஆகாதவர். இளைய மகன் கவியரசன், 21, அரியலுார் மாவட்டத்தில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்தார். காதல் திருமணம் செய்த கவியரசன் மனைவிக்கு 6 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.கார்த்திகேயன் அடிக்கடி குடிபோதையில் தாய் கமலா, தந்தை கவர்னர் ஆகியோரை திட்டி, தாக்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் கார்த்திகேயன் குடித்துவிட்டு வந்து தாய், தந்தையை திட்டி, தாக்கினார். கவியரசன் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கவியரசன், கட்டையால் கார்த்திகேயனை தாக்கினார். படுகாயமடைந்த கார்த்திகேயன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவர் இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். தாய் கமலா புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, கவியரசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X