சிறந்த விவசாயி விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த விவசாயி விருது

Added : ஆக 27, 2021
Share
மதுரை : அலங்காநல்லுார் அருகே செம்புகுடிபட்டியில் அட்மா திட்டம் மூலம் சிறந்த விவசாயிக்கான விருதை தண்டலையை சேர்ந்த லீலாவுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.வாவிடைமருதூரில் 200 எக்டேரில் சாகுபடி செய்துள்ள குறுவை நெல் சாகுபடியை கலெக்டர் ஆய்வு செய்தார். கொண்டையம்பட்டி உழவர் ஆர்வலர் குழுவுக்கு சிறந்த விவசாய குழுவுக்கான விருது, காசோலை வழங்கினார். செம்புகுடிபட்டி

மதுரை : அலங்காநல்லுார் அருகே செம்புகுடிபட்டியில் அட்மா திட்டம் மூலம் சிறந்த விவசாயிக்கான விருதை தண்டலையை சேர்ந்த லீலாவுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.

வாவிடைமருதூரில் 200 எக்டேரில் சாகுபடி செய்துள்ள குறுவை நெல் சாகுபடியை கலெக்டர் ஆய்வு செய்தார். கொண்டையம்பட்டி உழவர் ஆர்வலர் குழுவுக்கு சிறந்த விவசாய குழுவுக்கான விருது, காசோலை வழங்கினார். செம்புகுடிபட்டி உழவர் ஆர்வலர் குழு உருளை விதைப்புக் கருவி மூலம் 40 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்த குழு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இணை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர் சுப்புராஜ், உதவி இயக்குனர் வாசுகி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் ஆமீனம்மாள், உதவி விதை அலுவலர் அழகேசன், வேளாண் உதவி அலுவலர்கள் விக்னேஷ், பால்பாண்டி செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X